இந்திய பங்குச்சந்தைகள் உயர்கிறதா?.. நிலவரம் என்ன?.. நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்.!

0
93

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பலரும் உற்சாகம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியப் பங்குச்சந்தை குறித்த இன்றைய நிலவரத்தைப் பார்க்கலாம்..

இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி டிசம்பர் 14ஆம் தேதி வர்த்தகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டது. அதேபோல நேற்றும் (டிசம்பர் 15) பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தில் தொடங்கியுள்ளன.

சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்ந்தும் 71ஆயிரம் என்ற இமாலய இலக்கை அடைந்துள்ளது. அதே நேரத்தில் நிஃப்டி 21ஆயிரத்து 300 புள்ளியை அடைந்துள்ளது.

அமெரிக்கப் பத்திர வருவாய் குறைவு மற்றும் இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட GDP முன்னறிவிப்பு மற்றும் உலகளாவிய எண்ணெய் விலைகள் உள்ளிட்ட சாதகமான உள்நாட்டுக் காரணிகள் நிலவி வருகிறது. இதனால், 2024ஆம் ஆண்டில் வட்டி விகித குறைப்பு இருப்பதற்கான பல சாத்தியங்கள் இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

மேலும், 2024ஆம் ஆண்டில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விழுக்காடைக் குறைக்கும் எனவும் தரவுகள் மூலம் விளங்குகிறது. இந்த விளைவின் காரணமாக இந்தியாவிலும் இந்த வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக சர்வதேச சந்தைகளும் ஏற்றம் அடைந்துள்ளன. அதன்படி, ஆசியச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன. ஜப்பானின் Nikkei 225 மற்றும் தென் கொரியாவின் Kospi ஆகியவை மிதமான அளவு உயர்ந்துள்ளன.

அதேபோல, ஆஸ்திரேலியா பங்குச்சந்தைகள் கடந்த நான்கு மாதங்களில் உயர்வைச் சந்தித்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. வேலைவாய்ப்பு தரவு சிறப்பாக இருப்பது, அடுத்த ஆண்டில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விழுக்காட்டைக் குறைக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியப் பங்குச்சந்தையின் வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், எல்டிஐமைண்ட்டிரீ, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட ஐடி பங்குகளின் விலை 2 முதல் 5 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன.

அதேபோல் ஹெச்டிஎஃப்சி லைஃப், நெஸ்லே, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்,பிரிட்டானியா, ஐடிசி உள்ளிட்ட பங்குகளின் விலை 2 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here