சாம்சங் நிறுவனத்தின் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்க முடியும். எக்ஸ்சேஞ்ச் மூலம் வாங்குவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் முந்தைய ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜியை ரூ.10,000க்கும் குறைவாக வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு அமைந்துள்ளது. எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் இந்த விலைக்கு வாங்கலாம். சாம்சங்க் நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற தரமான மொபைல்களில் ஒன்று. சாப்ட்வேர் நன்றாக இருக்கும் என்பதால் உலகம் முழுவதும் அதிகமானோர் விரும்பி வாங்குகின்றனர். அதேநேரத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு பிரீமியம் சந்தையில், மற்ற பிராண்டுகள் கடும் போட்டியை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்த சூழலில் தான் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆஃபர்களுடன் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart-ல் Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் Exynos பதிப்பில் ரூ.43,000 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது. இதனால் போனின் விலை பாதிக்கு மேல் குறைந்துள்ளது. அதே நேரத்தில், வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்துவதில் நீங்கள் வெற்றி பெற்றால், இந்த ஃபோனை ரூ. 10,000க்கும் குறைவாகப் வாங்கலாம். இந்த பிரீமியம் போனை இந்த விலையில் பெறுகிறீர்கள் என்றால், வாங்குவதற்கு முன் யோசிக்க வேண்டியதில்லை.