Today Gold Rate: அதிரடியாக உயரும் தங்கம் விலை..!

0
183

Gold Silver Rate: கடந்த வாரத்தில் உச்சம் அடைந்த தங்கத்தின் விலை பின்னர் கனிசமாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்க நினைந்திருந்தவர்களு பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 8) இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை உச்சமடைந்த நிலையில் கனிசமாக விலை குறைந்தது. பின்னர், மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

22 காரட் தங்கத்தின் விலை:

ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 5,835 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்த்து ரூ. 46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலை:

24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 அதிகரித்து ரூ.6,305 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.50,440-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

அதாவது, ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 80ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here