Today Gold Rate: மீண்டும் அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை..!

0
89

Gold Rate: டிசம்பர் மாதத்தைப் பொருத்தவரை தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் இன்றைய நிலவரம் குறித்து காணலாம்..

சென்னையில் நேற்று முன் தினம் டிசம்பர் 16ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை:

ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,785க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை:

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.4,739க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ.37,912க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மட்டும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here