மெட்ரோ ரயில் பாலத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பாதுகாப்புப் படையினர் மீட்பு!

0
118

மெட்ரோ ரயில் தண்டவாள பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

டெல்லி: டெல்லியின் கீர்த்தி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நேற்று (டிச.12) மாலை 5.30 மணியளவில் மெட்ரோ ரயில் புறப்பட்டது. சரியாக ஷதிபூர் பகுதியில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் நடந்து வருவதாக ஓட்டுநர் கவனித்தார்.

உடனடியாக பெட்ரோவை நிறுத்திய ஓட்டுநர் இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அப்பெண் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி மெட்ரோ பாலத்திலிருந்து குதிக்க முயன்றார்.

ஆனால், அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணைக் காப்பாற்றினர். பின்னர், அந்த இளம்பெண்ணை டெல்லி மெட்ரோ ரயில் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அப்பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தடைசெய்யப்பட்ட மெட்ரோ ரயில் தண்டவாளத்திற்குள் பொதுமக்கள் யாரும் நுழைய வேண்டாம், இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தற்போது, மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் தற்கொலைக்கு முயலும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here