PUBG விளையாட்டால் தொடரும் விபரீதங்கள்..! சென்னை மாணவர் உயிரிழப்பு..!

0
123

கோடம்பாக்கத்தில் வீட்டில் நீண்ட நேரமாக பப்ஜி விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் மாணவர் ஒருவர், தனது செல்போனில் நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடியிருக்கிறார். இதனைக் கண்ட அவரது தாய், மாணவரை கண்டித்துள்ளார்.

இதனால், மன உளைச்சலடைந்த மாணவர் வீட்டிலன் தனது படுக்கை அறைக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார். இதனைக் கண்ட அவரது தாயார் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் விரைந்தனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேசில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வடபழனி காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடுவதால் ஏற்பாடும் பாதிப்புகள், தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் இந்த கேம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி சென்ற ஆளுநர் ரவி..! என்ன காரணம்?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here