சூடு வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு! மத்தியப் பிரதேசத்தில் நடந்த கொடூரம்!

0
99

மத்தியப் பிரதேசத்தில் இரும்பு கம்பியால் சூடு வைத்தால் சுவாச நோய் குணமாகும் என எண்ணி ஒன்றரை மாத ஆண் குழந்தைக்கு சூடு வைக்கப்பட்டதில் குழந்தை உயிரிழந்தது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள பந்த்வா கிராமத்தில் ஒன்றரை மாத பச்சிளம் குழந்தைக்கு சுவாச நோய் ஏற்பட்டுள்ளது. சுவாச நோய் குணமாக சூடான இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டது.

இதில், குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அந்த குழந்தை ஷாதோல் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

இரும்பு கம்பியால் சூடு வைத்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையால் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நடிகர் விஜய்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here