மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தீ வைத்த மர்ம கும்பல்..! தீவிர விசாரணையில் போலீஸ்..!

0
88

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்திப்பெற்ற கபாலீசுவரர் கோவில் ராஜகோபுர பிரதான நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது.

மது போதையில் அங்கிருந்த சில பொருட்களை வைத்து பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கோவிலின் கதவுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.

தற்போது கோவிலின் முன்பு தீ எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் மயிலாப்பூர் துணை ஆணையன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து கோவில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

ஆனால், அந்த கேமராக்கள் பழுதாகி இருப்பத்தாக தெரியவந்தது. இதனால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து, கோவிலின் அருகே உள்ள கண்காணிப்புக் கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை கூடிய விரைவில் கைது செய்வோம் என காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து குற்றவாளிகள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவாக காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘ஜெயம் ரவி ஒரு நாள் உச்சத்தை தொடுவார்’ – சமுத்திரகனி புகழாரம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here