Raadhika Sarathkumar: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்து போட்டியிடவுள்ளது என கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்தார்.
தொடர்ந்து, பாஜக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த விவரங்களை ஒரு வார காலத்திற்குள் அறிவிக்கப்படும் என சரத்குமார் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சமத்துவ மக்கள் கட்சி சார்பாக விருதுநகர் தொகுதியில் சரத்குமாரின் மனைவி ராதிகா போட்டியிட இருக்கிறார். முன்னதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த செய்தி உறுதியாகியுள்ளது.