MK Stalin: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதில், முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வருகிற 19ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனால், வரும் 27ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்சிகளும் தங்களது கூட்டணியை உறுதி செய்துவிட்டு தங்களது தொகுதி பங்கீடு செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார். அந்த வகையில் இன்று (மார்ச்.22) மாலை 5 மணியளவில் திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
அங்கு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருக்கிறார்.