Director Thangarbachan: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக-க்கு திண்டுக்கல், அரக்கோணம், கடலூர், ஆரணி, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரம் காட்டி வந்த நிலையில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக அறிவித்துள்ளது.
இன்னும் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், கடலூர் தொகுதியில் பாமக சார்பாக இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் தங்கர்பச்சான் தற்போது அரசியலிலுல் ஈடுபாடு காட்டிவருகிறார். தங்கர்பச்சானை தொடர்ந்து மற்ற தொகுதி வேட்பாளர்களின் பெயர்களையும் பாமக வெளியிட்டது,
இந்த தொகுதி வேட்பாளர் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கி உள்ள அந்த ஒரு தொகுதியில் அன்புமணி நிற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.