தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்த நிலையில், வேட்பாளர்கள் பலரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாளான இன்று இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாத வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
பொதுவாகவே கடைசி நாள் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் மனு தாக்கல் செய்யாத கட்சி வேட்பாளர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்ய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நேரமான மதியம் 3 மணிக்குள் டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு, டோக்கன் பெற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்த பின்னரும் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.