தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். விருப்ப மனுவை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார்.
முன்னதாக, அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.