மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி – தொண்டர்கள் உற்சாகம்..!

0
83

PM Modi: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டு இருக்கிறார்.

இதன் காரணமாக பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி, பெரம்பலூர், கோயம்புத்தூர், வேலூர் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய மேற்கொள்ள உள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி பல முறை தமிழ்நாட்டிற்கு வரும் நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு மீண்டும் மோடி வர இருப்பதாக வெளியான செய்தி பாஜக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here