Udhayanidhi Stalin: நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார்.
முதலாவதாக திருச்சியில் நேற்று தனது பிரச்சாரத்தை முதலமைச்சர் தொடங்கினார். தொடர்ந்து பல இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ஸ்டாலின் கடைசியாக வரும் 17ஆம் தேதி மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட அமைச்சர்கள், திமுக முன்னணி நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட பலரும் களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று அவர் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.