‘ஃபாரின் கேர்ளுடன் ஊர் சுற்றிய விஷால்’.. வீடியோ எடுப்பதைக் கண்டு தெறித்து ஓட காரணம் என்ன?

0
78

Actor Vishal walking with Girl: தமிழ் சினிமாவில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷால். இவர் தொடர்ந்து ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘மலைக்கோட்டை’ என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இவர், நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்னரே திருமணம் செய்துகொள்வதாக கூறியிருகிறார். இந்த நிலையில், தற்போது நியூயார்க் சிட்டியில் நடிகர் விஷால் ஒரு இளம்பெண்ணுடன் சுற்றும் வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது.

அதில், சாலையோரமாக இளம்பெண் ஒருவருடன் நடிகர் விஷால் நடந்து செல்கிறார். அதனைக் கண்ட ஒருவர் தனது செல்போனை எடுத்து விஷாலை படம் பிடிக்கிறார். அப்போது, அவர் விஷால் சார் என கூப்படவே இளம்பெண்ணுடன் இருந்த விஷால் தனது முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து தெறித்து ஓடுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் சிலர் விஷாலை கடுமையாக விமர்சித்து வந்தாலும், மறுபக்கம் இது படத்திற்கான புரமோஷனாக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மெகா ஹிட்டான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’.. இயக்குநருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கிய சதீஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here