அஜித்துடன் மீண்டும் இணையும் H.வினோத்?.. கமல் படம் என்னாச்சு?..

0
103

இயக்குநர் ஹெச்.வினோத் கமல்ஹாசனை வைத்து படம் இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் அஜித்துடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் இயக்குநர் ஹெச்.வினோத். தனது முதல் படமான சதுரங்க வேட்டை படத்திலேயே தமிழ் திரைத்துறையை அலறவிட்டவர் வினோத். வித்தியாசமான கதைக்களம், புதுமுக கதாநாயகன் என குறிப்பிட்ட நடிகர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு திரில் கிரைம் ஸ்டோரியை இயக்கி மாபெரும் வெற்றிகண்டார்.

இதனைத் தொடர்ந்து, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ என அடுத்தடுத்து அஜித் படங்களை இயக்கினார். இதனையடுத்து கமல்ஹாசனை வைத்து ‘KH233’ படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், இப்படம் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது கமலை வைத்து படம் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இடையில், மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் வீடியோ வெளியானது. இதன் மூலம் ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள திரைப்படம் தொடங்க காலதாமதமாகும் என்பது உறுதியானது. மேலும், கமல் தரப்பிலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், இயக்குநர் ஹெச்.வினோத், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தயாராகியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

பவாரியா கொள்ளைக் கும்பலைத் தேடிப் பிடிக்கும் இந்த கதைக்களம் காண்போரை சுவாரசியப்படுத்தியது. மாபெரும் ஹிட்டடித்தது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் கதை தயாராகவுள்ளதாகவும் கார்த்தி இதற்கு ஒப்புக்கொண்ட அடுத்த நிமிடமே படத்தை எடுக்க இயக்குநர் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து அஜித் தரப்பிடம் இயக்குநர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் அந்த படத்திற்கான படபிடிப்புற்காக அஜித் துபாய் சென்றுள்ளார். இப்படி இருக்க ஹெ.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பில்லை என ஒருபுறம் கூறப்படுகிறது.

ஹெ.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக வெளியான தகவல் எந்த அளவிற்கு உன்மை எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள், உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here