அஜித்தை வைத்து இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

0
81

AK Next Movie Update: நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் ‘துணிவு’ திரைப்படத்திற்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கமிட்டாகி இருந்தார். ஆனால், அவர் பைக் பயணம் மேற்கொண்டதால் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. விஷால், எஸ்,ஜே,சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தை வைத்து இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர அஜித் ரசிகர் என அனைவருக்கும் தெரியும், அவர், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தபோது அஜித்திடம் கதை கூறியிருக்கிறார். அந்த கதை அஜித்துக்குப் பிடித்துப்போனதால் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அந்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

விடாமுயற்சி திரைப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் அஜித் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்ததால் ரசிகர்கள் அப்செட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் அஜித் வேகமாக நடிக்க ஆரம்பித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: மகிழ் திருமேனிக்கு அழுத்தம் கொடுக்கும் அஜித்..! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here