அஜித் – வெற்றிமாறன் கூட்டணி கன்ஃபார்ம்! அப்போ வாடிவாசல் சூட்டிங் என்னாச்சு?

0
130

Ajith Kumar and Vetrimaaran combo locked?: இயக்குநர் வெற்றிமாறன், தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் வெற்றது.

இதனால் ரசிகர்களிடையே விடுதலை இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனாலும், வெற்றிமாறனின் வாடிவாசல் படம் பற்றிய தகவல்களும் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

நடிகர் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கவிருந்த வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புகள் 2024 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் படத்தில் அமீர் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக வெற்றிமாறன் கூறியிருந்தார்.

இயக்குநர் அமீரின் பருத்திவீரன் பிரச்சினை காரணமாக சூர்யா வாடிவாசலில் நடிப்பது சந்தேகமே என கூறப்படுகிறது. எனவே அஜித் வாடிவாசலில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் வாடிவாசல் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்றும் ‘AK 64’ படத்தின் மூலம் அஜித், வெற்றிமாறன் கூட்டணி இணையும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வாடிவாசல் முடிந்ததும் அஜித்தின் ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெற்றிமாறன் கன்ஃபார்ம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்!.. என்ன சொன்னார் தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here