அடுத்த ‘லேடி சூப்பர் ஸ்டார் த்ரிஷா’வா.. என்னங்க சொல்றீங்க..!

0
95

தமிழ் திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் தற்போது அடுத்த ‘லேடி சூப்பர் ஸ்டார் த்ரிஷா’ தான் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

சமீபத்தில் பான் இந்திய அளவில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை த்ரிஷா, அடுத்தடுத்த படங்களில் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். தற்போது ​​அஜர்பைஜானில் நடைபெற்று வரும் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வசிஷ்டா மல்லிடி இயக்கும் ‘விஸ்வம்பர’ படத்தில் த்ரிஷா முன்னணி நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

அதேபோல் நாகார்ஜுனாவுடன் த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும், மேலும் மலையாளத் திரையுலகில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் அடையாளம் என்ற படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த படங்களில் த்ரிஷா நடித்து வரும் நிலையில் அவருக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு வருவதாகவும், தமிழ் திரைத்துறையின் பல முக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் த்ரிஷாவின் கால்ஷீட்டுக்காக காத்துக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட நயன்தாரா, தற்போது தன்னை யாரும் சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் த்ரிஷா தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here