அடேங்கப்பா..! தனுஷின் மார்க்கெட் 200 கோடியா..!

0
84

Actor Dhanush: உலகளவில் நடிகர் தனுஷின் மார்க்கெட் அதிரடியாக 200 கோடி வரை எகிறி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைத்துறையில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான தனுஷ், அடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது பிரபலமானார்.

முதலில் தனுஷின் தோற்றம், உருவம் ஆகியவற்றை வைத்து ரசிகர்கள் அவரை கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழலிலும் தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம்பெற்றார். சைக்கோ, நகைச்சுவை, ஆக்‌ஷன், எமோஷன், கமர்ஷியல் என அனைத்து விதமான படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் வரிசையாகத் தனது ஹிட் படங்களைக் கொடுத்து வந்த தனுஷ் திடீரென பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து ஷமிதாப் படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ராஞ்சனா திரைப்படம் இந்தியிலேயே 100 கோடி ரூபாய்க்கு வசூல் செய்தது.

இதனைத் தொடர்ந்து, ஹாலிவுட்டுக்குச் சென்ற தனது அங்கு, அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான ‘தி கிரே மேன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உலகளவில் தனது மார்க்கெட்டை உயர்த்திய நடிகர் தனுஷ் இந்த ஆண்டு ‘வாத்தி’ படத்தில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

இதுவரை பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் படங்கள் 100 கோடி வரை தான் வசூல் ஈட்டி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு உரிமம், ஓடிடி, சாட்டிலைட் உரிமம் என ஒட்டுமொத்தமாக தனுஷ் படங்கள் 200 கோடி ரூபாய்க்கு மார்க்கெட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here