‘அட்லீ யாரை வைத்து படம் எடுத்தாலும் நாங்கள் தான் தயாரிப்போம்’.. அடம்பிடிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

0
88

Director Atlee: இயக்குநர் அட்லீ சமீபத்தில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்தார். அடுத்ததாக அவர் பிரபல பான் இந்திய ஸ்டாரை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அட்லீ யாரை வைத்து படம் எடுத்தாலும் நாங்கள் தான் தயாரிப்போம் என ஒரு நிறுவனம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். அட்லீயின் அடுத்த படத்திற்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அட்லீயின் அடுத்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்வுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஜவான் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும் சில பிரச்சினைகள் காரணமாக தயாரிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், அட்லீயின் அடுத்த படம் யாரை வைத்து இயக்குனாலும் அதனை ‘சன் பிக்சர்ஸ்’ தான் தயாரிக்கும் என அந்நிறுவனம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இயக்குநர் அட்லீ தனது அடுத்த படத்தை ஷாருக்கான் மற்றும் விஜய்யுடன் சேர்ந்து இயக்க திட்டமிட்டுள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கும் புஷ்பா 2 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் அல்லு அர்ஜுனுடன் அட்லீயின் படத்தில் நடிக்க முடியும். இயக்குநர் அட்லீக்கும் சூட்டிங் போக நான்கு மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. நான்கு மாதங்கள் ஸ்கிரிப்ட் எழுதிய பின்னரே படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அல்லு அர்ஜுன் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் வரிசையாக கமிட்டாகியுள்ள நிலையில் இது சாத்தியாமாகுவா என தெரியவில்லை. இவையெல்லாம் உண்மை என எடுத்துக்கொள்ள முடியாது இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இவையெல்லாம் நடக்கும்பட்சத்தில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: அஜித்தை வைத்து இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here