‘அனிமல்’ படத்தில் 9 நிமிட காட்சிகள் நீக்கம்..! என்ன காரணம் தெரியுமா?..

0
89

“Animal’: நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’ படத்தில் 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அனிமல்’. இப்படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார்.

இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. விரைவில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘அனிமல்’ திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘அனிமல்’ திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக 8 நிமிடங்கள் சேர்க்கப்பட்டால் 3 மணிநேரம் 30 நிமிடம் ரன்னிங் டைம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த நேர்காணல் பங்கேற்ற அவர், ‘அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2025-ஆம் ஆண்டு தொடங்கும் என கூறியுள்ளார்.

மேலும், இந்த பாகத்திற்கு ‘அனிமல் பார்க்’ என பெயர் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனிமல் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அனிமல் இரண்டாம் பாகமான அனிமல் பார்க் படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here