அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!.. இந்த டைட்டிலுக்கும் பிரச்சினையா?..

0
64

IraivanMigaPeriyavan: இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்து பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சென்னை: இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இறைவன் மிகப்பெரியவன்’. இந்த படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தை ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இயக்குநர் அமீட் இயக்கிய ‘மௌனம் பேசியதே’ படத்தை தவிர்த்து மற்ற படங்கள் விமர்சனத்திற்குள்ளாகி வரும். அந்த வகையில், 2005ஆம் ஆண்டு வெளியான ‘ராம்’ திரைப்படத்தின் போஸ்டரில் காவியும், கருப்பு நிறமும் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்ட ரசிகர்கள் இப்படம் மதம் சார்ந்த படமா? இறை நம்பிக்கை குறித்து பேசும் படமா? என விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, நடிகர் கார்த்தியை வைத்து 2007ஆம் ஆண்டு ‘பருத்திவீரன்’ என்ற மெகா ஹிட் படத்தை இயக்கினார். இப்படத்தின் பெயருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பருத்திவீரன் குடும்பத்தினர் இந்த படத்தின் டைட்டிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியை வைத்து 2013ஆம் ஆண்டு ‘ஆதிபகவன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தயாரித்த நிலையில் இந்த படத்தில் வைக்கப்பட்டுள்ள டைட்டில் குறித்து தகராறு குறைந்தது.

சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் கட்டாயம் படத்தின் டைட்டில் குறித்து சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றன.

இதையும் படிங்க: பொங்கல் ரேஸில் களமிறங்கும் அருண் விஜய்.. ‘Mission Chapter 1’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here