‘அயலான்’ அப்டேட்..! ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்தது இவரா..! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0
109

Ayalaan Update: தமிழ் திரைத்துறையின் நம்ம வீட்டு பிள்ளை என அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.

ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான நகைச்சுவை கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு ரத்தானது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுக்கவேண்டிய காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது. மீதம் இருந்த அந்த காட்சிகளைப் படமாக்கி முடிக்க மூன்று வருடங்களாகியதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற விஷயங்கள் இருப்பதால் படம் திரைக்கு வர தாமதமானது. இப்படி பல தடைகளைக் கடந்து அயலான் தற்போது திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘அயலான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளதாகப் படக்குழு புகைப்படங்களுடன் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘அயலான்’ டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ‘அயலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here