‘அயலான்’ இசை வெளியீட்டு விழா..! மாஸ் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்!

0
133

‘Ayalaan Audio Launch’: ‘அயலான்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் நிகழ்ச்சியில் மாஸாக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

‘ஏலியன்’ கதை களத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்லப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். மேலும், யோகி பாபு, கருணாகரன், பாலா உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் அதி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (டிச.26) சென்னையில் உள்ள தாஜ் கோரமாண்டலில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் நாயகனான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் என்ட்ரி கொடுத்து பின்னர் அவரது இறுக்கைக்குச் சென்றார். தொடர்ந்து படக்குழுவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்கிடையே படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், மாஸாக எண்ட்ரி கொடுத்தார்.

விழாவிற்கு, நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தன்னுடைய மகள் ஆராதனா மற்றும் மகன் குகனுடன் கலந்துகொண்டார். இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் லைவ் பெர்ஃபாமன்ஸ் செய்கிறார். மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ‘Hitler Teaser’: வெளியானது விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட டீசர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here