‘அயலான்’ இரண்டாவது சிங்கிள் விரைவில்..! படக்குழு அறிவிப்பு..!

0
116

Ayalaan Update: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான நகைச்சுவை கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு ரத்தானது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுக்கவேண்டிய காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது. மீதம் இருந்த அந்த காட்சிகளைப் படமாக்கி முடிக்க மூன்று வருடங்களாகியதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற விஷயங்கள் இருப்பதால் படம் திரைக்கு வர தாமதமானது. இப்படிப் பல தடைகளைக் கடந்து அயலான் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென அயலான் பட வெளியீட்டுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து.

ஆனால், படக்குழு தரப்பில் கண்டிப்பாக ‘அயலான்’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 26ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது படம் ரிலீஸ் ஆகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது படக்குழு ஒரு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘அயலான்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இது குறித்து இப்படத்தைத் தயாரிக்கும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால், அப்செட்டில் இருந்த ரசிகர்கள் ஹாப்பியில் உள்ளனர்.

இதேபோல், கடந்த நவம்பர் 30ஆம் தேதி ‘அயலான்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டது. ஆனால், வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போதும் இந்த இரண்டாவது சிங்கிள் வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here