‘அயலான்’ படத்தின் 4 நாட்கள் வசூல் இத்தனை கோடியா!…

0
174

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அயலான்’ திரைப்படம் இதுவரை உலக அளவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதனை அதிகாரபூர்வமாக படக்குழு போஸ்டர் மூலம் பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அன்னபூரணி பட விவகாரம்.. ‘இது திரைத்துறைக்கு நல்லதல்ல’ – இயக்குநர் வெற்றிமாறன் கருத்து..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here