‘அயலான் பார்ட் 2’ கட்டாயம் வரும் – சிவகார்த்திகேயன்..!

0
64

‘Ayalaan’: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ரவிக்குமார். இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி வெளியான ‘அயலான்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அளித்துள்ள பேட்டியில், “ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் நான் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி உள்ளன.

ஆனால் அந்த படத்தில் நடிக்கும்படி இதுவரை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். 80 விழுக்காடு படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன்.

‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும். அதற்கான திட்டங்கள் உள்ளன. என்னை பொருத்தவரை ஓடிடி தளங்கள் சாதகமானதாகவே தெரிகிறது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here