‘அயலான்’ வசூல் எத்தனை கோடி தெரியுமா?.. படக்குழு அறிவிப்பு..!

0
88

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.

ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான நகைச்சுவை கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அயலான் ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்தது. தொடர்ந்து அயலான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதனிடையே அயலான் திரைப்படம், முதல் இரண்டு நாள்களில் உலகளவில் ரூ. 19 கோடியை வசூலித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.

அதன்படி ‘அயலான்’ திரைப்படம் நேற்று வரை உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை பட குழு தனது ‘x’ தளத்தில் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here