Mission Chapter 1: இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’. இப்படத்தில், நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் இந்த படத்தில் ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இது குறித்து லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளது.
பொங்கல் தினத்தன்று ஏற்கனே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’, விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த போட்டியில் தற்போது Mission Chapter 1 படமும் மோதவுள்ளது.
லைகா தயாரிப்பில் வெளியாக இருந்த ‘லால் சலாம்’ திரைப்படம் தள்ளிப் போன நிலையில் ‘Mission Chapter 1’ படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: ‘Lal salaam’ Release: பொங்கல் போட்டியில் இருந்து விலகிய ‘லால் சலாம்’!.. என்ன காரணம்..!