அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வியந்து பார்த்த நடிகர்கள்..

0
126

தமிழ்நாட்டில் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் உலக புகழ்பெற்ற மதுரை மாவட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கலன்றும், பாலமேட்டில் நேற்றும் நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். மேலும், அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர்கள் அருண் விஜய், இயக்குநர் விஜய், நடிகர் சூரி, நியா நானா கோபி ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்று ஜல்லிக்கட்டை நேரில் பார்த்து வருகின்றனர்.

விழா மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து, மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள் ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க காசுகளை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here