‘இது ‘The Greatest of all Time’ பொங்கலாக இருக்கும்’.. படக்குழு வெளியிட்ட போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு..

0
106

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் ‘The Greatest of all Time’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் அப்டேட் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இது ‘The Greatest of all Time’ பொங்கலாக இருக்கும் என பதிவிட்டிருந்தார். இதன்மூலம், இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் ‘The Greatest of all Time’ படத்தின் போஸ்டர் ஒன்றை தங்களது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், நடிகர் விஜய், பிரபு தேவா, பிரபு தேவா, அஜ்மல் அமீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நாள் ‘The Greatest of all Time’ பொங்கலாக இருக்கும் என வெங்கட் பிரபு கூறியதுபோல படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘எனக்கு தற்கொலை எண்ணம் வந்தது’ – ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சி தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here