இத்தனை கோடி சம்பளமா?.. ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம்..! பிரதீப் ரங்கநாதன் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

0
77

Pradeep Ranganathan: ‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கு அவர் கேட்டுள்ள சம்பளம் தயாரிப்பாளரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ஜெயம் ரவியை வைத்து 2019-ஆம் ஆண்டு ‘கோமாளி’ திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநராக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

அடுத்தபடியாக ‘லவ் டுடே’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக இவானாவும், சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்தது.

இதனையடுத்து பிரதீப் ரங்கநாதனுக்கு 20க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், அவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ரூ.10 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் (LIC) திரைப்படத்திற்கு அவர் ரூ.15 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here