இன்று வெளியாகும் ‘சிங்கப்பூர் சலூன்’ முதல் பாடல்!

0
113

Singapore Salon: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை ‘ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகை அலங்கார நிபுணராக நடித்திருக்கிறார். அவருடன் இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றையும் படக்குழு ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளது.

‘சிங்கப்பூர் சலூன்’ படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.. மேலும், இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வரவிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக படம் தள்ளிப்போனது.

இதையும் படிங்க: ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படக்குழு பொங்கல் வாழ்த்து..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here