‘எனக்கு வில்லியாக நடிக்க ஆசை’ – நடிகை கத்ரீனா கைப்!

0
55

சமீபத்தில் வெளியான ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கத்ரீனா கைப், “காலத்துக்கு ஏற்ற மாதிரி மனிதர்களின் எண்ணங்களும், ஆலோசனைகளும் மாறிக்கொண்டே இருக்கும். கதாநாயகியை தாண்டி அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

வில்லி கேரக்டர்களிலும், பீரியட் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். நல்ல பீரியட் கதை கிடைத்தால் அதில் நிச்சயமாக நடிப்பேன்” எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுக்கு நான் தீவிர ரசிகை. ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . அவர் திறமைக்கும், உணர்வுகளுக்கும் மிகுந்த மதிப்பு அளிப்பார்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here