என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என யாரும் அழைக்க வேண்டாம்.. ரசிகர்களுக்கு கண்டிஷன் போட்ட நயன்தாரா!

0
88

Nayanthara: நடிகர் நயன்தாரா சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தன்னை ரசிகர்கள் யாரும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர், 2003ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார்.

தொடர்ந்து, ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். திரைத்துறையில் பல ஏற்றம் இறக்கங்களைச் சந்தித்த நயன்தாரா, இதுவரை கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ‘ஜவான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஹிந்தியில் நயன்தாரா முதல் முதலில் நடித்த திரைப்படம் ‘ஜவான்’. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரியளவில் பேசப்பட்டார்.

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. குழந்தைகள், குடும்பம் என இருந்தாலும், தனது சினிமா பயணத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அழகு சாதனப்பொருட்களை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படத்தின் புரோமஷனுக்காக நயன்தாரா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அந்த நேர்காணலில் பேசிய நயன்தாரா, ரசிகர்கள் இனிமேல் தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here