“என் ஆசை ஏஞ்சல், நீ தான் எல்லாம்” – மனைவிக்கு ரொமாண்டிக் வாழ்த்து கூறிய அட்லி..

0
107

இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லி. இவர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற மெகா ஹிட் படத்தை இயக்கினார்.

இயக்குநர் அட்லி தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின்னர், விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் விஜய்க்கு மெகா ஹிட்டானது. தொடர்ந்து இயக்குநர் அட்லி விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தார்.

பின்னர், தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்ற அட்லி அங்கு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பெற்றது. இந்நிலையில், இயக்குநர் அட்லீ தனது மனைவியை கட்டி அணைத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது மனைவி பிரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “இது உங்கள் பிறந்த நாள், நான் ஒரு பெண்ணுக்காக பிரார்த்தனை செய்தேன், ஆனால், கடவுள் மிகவும் தாராளமானவர், அவர் எனக்கு ஒரு தேவதையைக் கொடுத்தார். என் ஆசை ஏஞ்சல், நீ தான் என் எல்லாம்” என கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here