ஒரே நாளில் வெளியாகும் ரஜினி- கமல் மூவிஸ்.. ரசிகர்கள் உற்சாகம்..!

0
95

நடிகர் ரஜினிகாந்தின் ‘முத்து’ மற்றும் கமலின் ‘ஆளவந்தான்’ திரைப்படங்கள் உலகம் முழுவதும் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால், இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆளவந்தான்’. தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்திருந்தது. இந்த படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதற்கிடையே 22 வருடத்திற்குப் பிறகு ‘ஆளவந்தான்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகத் தயாரிப்பாளர் தாணு, கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதன்படி இந்த படம் டிஜிட்டல் வெர்ஷனில் இன்று உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதேபோல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு ‘முத்து’ திரைப்படம் வெளியானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மீனா, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ள ‘முத்து’ திரைப்படம் டிசம்பர் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி ‘முத்து’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக இன்று ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

ரஜினி – கமல் ஆகியோரது திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இரண்டு பிளாக்பஸ்டர் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here