ஓடிடி-ல் வெளியாகவுள்ள ‘அன்னபூரணி’.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?..

0
65

‘Annapoorani’: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஜெய் நடிப்பில் டிசம்பர் 1ஆம் தேதி வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அன்னபூரணி’. இது நயன்தாராவின் 75ஆவது படமாகும். இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் சத்யராஜ், பூர்ணிமா, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது தன்னுடைய 75-வது படம் என்பதால் இதற்கு கூடுதல் கவனம் செலுத்தி இருந்தார் நயன்தாரா. ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்தியில் ஹீரோயினாக அறிமுகமான ஜவான் படத்துக்கே புரமோஷன் எதுவும் செய்யாமல் இருந்த நயன்தாரா, அன்னபூரணி படத்துக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்ததோடு சமூக வலைத்தளங்களிலும் புரமோஷன் செய்தார்.

ஆனால், அன்னபூரணி படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் படம் திரைக்கு வரவில்லை. இதனால், அப்செட் ஆன படக்குழு படத்தை வேறுவழியின்றி ஓடிடிக்கு விற்றுள்ளது. அதன்படி அன்னபூரணி படம் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அன்றைய தினம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி ரிலீசுக்கு பின் இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்குமா என படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here