கமல்ஹாசனின் ‘KH237’ படத்தை இயக்கும் இரட்டை சகோதரர்கள்..! அதிரடி ஆக்‌ஷன் கன்பார்ம்..!

0
165

‘KH237’: மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளர்களாக பிரபலமான அன்புமணி, அறிவுமணி என்ற இரட்டை சகோதரர்கள், கேஜிஎஃப் படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக இருந்து தேசிய விருதைப் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் சண்டை பயிற்சியாளர்களாக இருந்து அசத்தியுள்ளனர்.

இவர்கள், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அன்பு, அறிவு ஆகிய இருவரும் தற்போது கமல்ஹாசனை வைத்து படத்தை இயக்கவுள்ளனர்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் ‘KH237’ படத்தில் நடிப்பதை பெருமையாக நினைப்பதாகவும், இருவரையும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு அழைப்பதில் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘கேப்டன் மில்லர்’ படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.. – பிரியங்கா மோகன் இன்ஸ்டாவில் பதிவு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here