‘கருணாநிதி 100 விழா’.. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு ரத்து!

0
123

தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஜனவரி மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இரண்டு நாள்களுக்கு படப்பிடிப்பு நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, “தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி ‘கலைஞர் – 100’ விழா நடைபெறுகிறது.

டிசம்பர் 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த இந்நிகழ்ச்சி மழை வெள்ளம் காரணமாக ஜனவரி 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால், திரைத்துறையினருக்கு ஏற்கனவே டிச.23, 34 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்நாட்களில் படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ளலாம்.

மேலும், கலைஞர் 100 விழா ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, ஜனவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறக்கூடாது.

மேலும், ஜனவரி 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடன காட்சிகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கட்டாய அவசியம் இருந்தால், சிறப்பு அனுமதி பெற்று பாடல் காட்சிகள் அமைக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here