‘கலைஞர் 100’ நிகழ்ச்சி: என்ன நடக்கவுள்ளது?.. யார் யார் பங்கேற்கவுள்ளனர்?

0
134

Kalaignar 100′: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தமிழ் திரைத்துறை வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பைப் போற்றும்விதமாக ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கலைஞர் கருணாநிதியின் திரைப்பயணம் மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக அவரின் நூறாவது ஆண்டை சிறப்பிக்க இந்நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அந்த வகையில், ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், திரைத்துறை நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், நிகழ்ச்சியில் ‘கலைஞர் தசாவதாரம்’ என்ற பெயரில் நாடகம் நடைக்கவுள்ளது. இந்த நாடகத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். மேலும், அந்த கதையில் வரும் கலைஞராக ரவிக்குமார் நடிக்கிறார். ரமேஷ் கண்ணா அண்ணாவாக நடிக்கவுள்ளனர். பெரியாராக வேலுபிரபாகரன் நடிக்கிறார்.

தொடரந்து, இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனஷ் கலைஞர் குறித்து தானே ஒரு பாடலை எழுதி தானே பாடவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு துபாயில் இருப்பதால் கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு வருவதில் சந்தேகம் என கூறப்படுகிறது.

முக்கியமாக நடிகர் சங்க செயலாளர் விஷாலும் வெளிநாட்டில் இருப்பதால் அவரும் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கும், விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் வரமாட்டார் என கூறப்படுகிறது.

இதனால், இந்த கலைஞர் 100 விழாவில் நடிகர் சங்கத்தின் பங்களிப்பு குறைவாகவே இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. முக்கியமாக இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, கார்தி ஆகியோர் கட்டாயம் வரவுள்ளதாகவும், நடிகர் விஜய் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த டிசம்பர் 24ஆம் தேதி இந்நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஜனவரி 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி நாளை கலைஞர் 100 வெகு விமர்சியாக நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: வெளியானது அருண் விஜய் நடிக்கும் ‘Mission Chapter 1’ டிரைலர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here