‘கலைஞர் 100 விழா’: தனுஷ், நயன்தாராவுக்கு நேரில் அழைப்பு..!

0
77

kalaignar 100 years: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தமிழ் திரைத்துறை வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பைப் போற்றும்விதமாக ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர்கள் தனுஷ், நயன்தாரா ஆகியோருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நேரில் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் திரைப்பயணம் மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக அவரின் நூறாவது ஆண்டை சிறப்பிக்க இந்நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், திரைத்துறை நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த ‘கலைஞர் 100 விழா’-வை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் தனுஷுக்கு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இதேபோல் நடிகை நயன்தாராவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக வரும் டிசம்பர் 24ஆம் தேதி இந்நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், தற்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயலால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகையால், ‘கலைஞர் 100 விழா’ வரும் டிசம்பர் 24ஆம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here