‘கலை படைப்பை பாராட்ட நீங்கள் ஒருபோதும் தவறியது இல்லை’ – உதயநிதிக்கு நன்றி தெரிவித்து தனுஷ் ட்வீட்..!

0
81

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் நேற்று (ஜன.12) உலகளவில் வெளியானது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆன ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும், படம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகை பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்”எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக உதயநிதியின் பதிவுற்கு பதிலளிக்கும் விதமாகவும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நடிகர் தனுஷ் தனது ‘X’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “உங்களுக்கு பிடித்த கலை படைப்பை பாராட்ட நீங்கள் ஒருபோதும் தவறியது இல்லை. ‘கர்ணன்’ பட வெளியீட்டின் போதும் நீங்கள் பாராட்டியது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

இந்த பாராட்டு எனக்கும் எனது ‘கேப்டன் மில்லர்’ குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘தெரியாம பேசிட்டோம்.. இனிமேல் இப்படி பண்ண மாட்டோம்..’- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட புகழ், குரேஷி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here