காமெடி நடிகர் போண்டா மணி காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்..

0
106

Actor Bonda Mani: இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் நடிகர் போண்டா மணி உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் போண்டா மணி 1991ஆம் ஆண்டு வெளியான பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், வசீகரா, சுந்தரா டிராவல்ஸ், வின்னர் உள்ளிட்ட 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

இவர், சென்னை பொழிச்சலூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அவருடன் நடித்த நடிகர்கள் அவருக்கு உதவி செய்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தநிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை பொழிச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here