கார்த்தி அமைதி காப்பது தவறான செயல்..”நடிகர் குட்டிச்சாக்கு அறிவுரை……

0
58

அமீரின் பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் படத்தின் மூலம் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார்.
இந்நிலையில், பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்தச் சம்பவத்தில் அமீருக்கு ஆதரவாக பருத்திவீரனில் நடித்த குட்டிச்சாக்கு என்ற விமல்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமீருக்கு ஆதரவுத் தெரிவித்த குட்டிச்சாக்கு அமீரின் பருத்திவீரன் திரைப்படம் தமிழில் கல்ட் கிளாஸிக் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. மெளனம் பேசியதே மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், அடுத்து ஜீவா நடிப்பில் ராம் படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்து பருத்திவீரனை இயக்கினார் அமீர். இந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமாகினார். கார்த்தியுடன் ப்ரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சரவணன் ஆகியோர் லீட் ரோலில் நடித்தனர். இவர்களுடன் குட்டிச்சாக்கு என்ற சிறுவனாக விமல்ராஜ் என்பவர் நடித்திருந்தார். மதுரையைச் சேர்ந்த இவரை படப்பிடிப்புத் தளத்தில் தேர்வு செய்து நடிக்க வைத்தாராம் அமீர். பருத்திவீரனுக்குப் பிறகு குட்டிச்சாக்குக்கு சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும், இந்தப் படத்தில் குட்டிச்சாக்குவின் கேரக்டரையும் அவரது நடிப்பையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் – ஞானவேல்ராஜா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். ஆனால், படப்பிடிப்பின் போது பட்ஜெட் பிரச்சினை காரணமாக அமீர், ஞானவேல்ராஜா இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர் படத்தை அமீரே தனது சொந்த செலவில் தயாரித்து வெளியிட்டுள்ளார்.ஆனால், பருத்திவீரன் ஞானவேல்ராஜாவின் க்ரீன் ஸ்டுடியோ பேனரில் வெளியானது. அதுமட்டும் இல்லாமல் சொன்னதை விட பட்ஜெட் அதிகமானதாக அமீர், ஞானவேல்ராஜா இடையே மீண்டும் பிரச்சினை வந்தது. இதனால் தனக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் எனவும், அதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் அமீர் கூறியிருந்தார். இதற்கு விளக்கம் கொடுத்த ஞானவேல்ராஜா. அமீர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் திருடன் எனவும் கூறியிருந்தார். மேலும், பருத்திவீரன் படத்தில் தான் அவர் சினிமாவையே கற்றுக்கொண்டதாகவும் எகத்தாளமாக பேசியிருந்தார். ஞானவேல்ராஜாவின் பேட்டி வைரலான நிலையில், அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சசிகுமார், நடிகர் சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். பருத்திவீரன் போன்ற தரமான படைப்பை இப்படி அவமதிக்க வேண்டாம் எனவும் ஞானவேல்ராஜாவுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிசையில் தற்போது குட்டிச்சாக்குவும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “திரு ஞானவேல் அவர்கள் பேசிய காணொலியை பார்க்க நேர்ந்தது. தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த என்னை அழைத்து நடிப்பு சொல்லி கொடுத்து எனக்கு வாய்ப்புக் கொடுத்த அமீர் மாமா மீது இப்படியான பழிகளை சுமத்தியது மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு போனவர் நீங்கள். அதன் பிறகு அங்கு நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நபர் என்ற முறையில் நான் நன்கு அறிவேன்.”
படம் ஆரம்பத்தில் இருந்த மகிழ்ச்சியான அமீர் மாமா அதன் பிறகு அவருக்கு அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அதை அனைத்தையும் படப்பிடிப்புத் தளத்தில் அருகில் இருந்து பார்த்தவன் நான். எனவே ஞானவேல் அவர்கள் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். எனக்கும் கார்த்தி அண்ணாவுக்கும் அதுதான் முதல் படம். அவரும் அந்த சூழலை நன்கு அறிவார், தற்போது அவர் அமைதி காப்பது மிகவும் தவறான செயல்.” என குறிப்பிட்டுள்ள குட்டிச்சாக்கு, இறுதியாக திருக்குறள் ஒன்றை வைத்தும் கார்த்திக்கு அறிவுரை கூறியுள்ளார்.
“ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்” விளக்கம்: நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணயம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார். இப்படிக்கு குட்டிச்சாக்கு என்னும் விமல்ராஜ், என முடித்துள்ளார். குட்டிச்சாக்கின் இந்த அறிக்கை பருத்திவீரன் சர்ச்சையில் அமீருக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here