‘குண்டூர் காரம்’ படத்தில் பீடி புகைத்த விவகாரம்.. மகேஷ் பாபுவின் விளக்கம் என்ன?..

0
150

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. இந்த திரைப்படம் தெலுங்கு சங்கராந்தியை முன்னிட்டு வெளியானது. ஆந்திராவில் தமிழ் படங்களான அயலான், கேப்டன் மில்லர், படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு போட்டியாக தெலுங்கில் ஹனுமான் படம் மட்டுமே வெளியானது.

இந்த படத்தை திரிவிக்ரம் இயக்க, தமன் இசையமைத்திருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேமிலி ஆக்சன் கதைக்களமாக உருவாகியுள்ள ‘குண்டூர் காரம்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்த படம் உலக அளவில் முதல் நாளில் 94 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. இது ரசிகர்களுக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டு என பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் ‘குண்டூர் காரம்’ படத்தில் தான் பயன்படுத்தியது ஆயுர்வேத பீடி என நடிகர் மகேஷ்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக மகேஷ் பாபு அளித்த பேட்டியில், “குண்டூர் காரம் படத்தில் நான் பயன்படுத்திய பீடி, உண்மையான பீடி அல்ல. அது ஒரு ஆயுர்வேத பீடி. அதில் புகையிலைக்கு மாறாக லவங்க இலைகள் தான் சேர்க்கப்பட்டு இருக்கும்.

முதல்முறை எனக்கு படக்குழுவினர் உண்மையான பீடியைக் கொடுத்துவிட்டனர். அதனை புகைத்ததும் எனக்கு தலைவலி வந்துவிட்டது. இதனை என்னால் புகை பிடிக்க முடியாது என கூறிவிட்டேன். பின்னர் படக்குழுவினர் ஆயுர்வேத்ததால் ஆன பீடியை கொடுத்தார்கள். அதில் எந்த பிரச்சினையும் இருக்காது என கூறினர். அதன் பின்புதான் அதனை புகைத்தேன். நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘அயலான்’ படத்தின் 4 நாட்கள் வசூல் இத்தனை கோடியா!…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here