‘குற்றப் பரம்பரை’ வெப் சீரிஸ் இயக்கும் சசிகுமார்..! முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது யார் தெரியுமா?..

0
87

‘kutrap parambarai’: ஆங்கில ஏகாதிபத்திய கொடுமையின் உச்சத்தை எதிர்த்த சில வகுப்பினரைக் கொடுமைப்படுத்த ஏற்பட்ட ‘குற்றப் பரம்பரை’ சட்டம் குறித்த வெப் சீரிஸை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இயக்கவுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கருமாத்தூரில் அருள் ஆனந்தர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இன்று (டிச.23) கலை இலக்கிய விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநரும், நடிகருமான சசிக்குமார், க/பெ.ரணசிங்கம் பட இயக்குநர் விருமாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சசிக்குமார் மற்றும் விருமாண்டி ஆகிய இருவரும், கலை இலக்கிய விழாவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்கள்.

தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் சசிக்குமார், “கல்லூரியில் மட்டுமே அதிகமான நட்புகள் நண்பர்கள் கிடைப்பார்கள். அயோத்தி படம் என்னையே மாற்றியது, நிறைய நண்பர்களை வைத்து தான் படம் எடுத்து வந்தேன், இந்த படம் மனிதத்தைக் காட்டியதை விட எனக்கும் கற்றுத் தந்தது.

தெரிந்தவர்களுக்கு உதவி செய்வதைப் போலத் தெரியாதவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். கலை இலக்கிய விழாக்களைப் பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து நடத்த வேண்டும். நம் மண் சார்ந்த கலையையும், நம் கலாச்சாரத்தையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது” என்றார்.

தொடர்ந்து, அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் ‘இயக்குநராக இருந்து நடிகரான சசிக்குமார், மீண்டும் எப்போது இயக்குநர் ஆவார்?’ எனக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சசிகுமார், “விரைவில் வரும் ஜனவரியில் நெட் ப்ளிக்ஸ் மூலம் வெப் சீரிஸ் இயக்க உள்ளேன். ‘குற்றப் பரம்பரை’ நாவலைத் தழுவி எடுக்க உள்ள வெப் சீரிஸ்-ல் சத்யராஜ் நடிக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

ஆங்கில ஏகாதிபத்திய கொடுமையின் உச்சத்தை எதிர்த்த சில வகுப்பினரைக் கொடுமைப்படுத்த ஏற்பட்ட சட்டம் தான் ‘குற்றப் பரம்பரை சட்டம்’. இது குறித்து நடிகர் வேல ராமமூர்த்தி புத்தகம் எழுதியிருக்கிறார்.

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை

இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்துத் தான் சசிகுமார் ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரிஸை இயக்கவுள்ளார். கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ‘மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்’ – உயர் நீதிமன்றம் உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here