‘கேப்டன் மகனுடன் நடிக்க தயார்.. நல்ல கதை கொண்டுவாங்க..’ – நடிகர் லாரன்ஸ்..!

0
100

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன். இவர் சினிமாவில் கதாநாயகனாக ‘சகாப்தம்’ என்ற படம் மூலம் அறிமுகமாகினார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனாக வரமுடியாமல் தவித்து வருகிறார்.

முன்னதாக நடிகர் விஜயகாந்த் உச்சத்தில் இருந்தபோது நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரது படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து அவர்களது சினிமா பாதைக்கு உதவி செய்தார். அதுபோல விஜய், சூர்யா ஆகியோர் சினிமாவில் கால்பதிக்க முடியாமல் தவிக்கும் கேப்டனின் மகனின் படங்களில் நடித்து உதவி செய்திருக்க வேண்டும் என விஜயகாந்த் மறைவின் போது சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், தற்போது நடிகர் லாரன்ஸ், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கத் தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சமீபத்தில் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திய போது விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் தங்கை என்னைப் பார்த்து ‘தம்பி ஹீரோவா பண்ணிட்டிருக்காரு, நீங்களாம்தான் பார்த்துக்கணும்’ என சொன்னார்கள்.

அது என்னை என்னவோ செய்தது, ஒரு மாதிரியாக இருந்தது. ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தேன். நிறைய ஹீரோக்கள் நடிக்கிற படத்துல வந்து விஜயகாந்த் சார், கெஸ்ட் ரோல் பண்ணுவாரு, பைட் பண்ணுவாரு, சாங் பண்ணுவாரு.

மத்தவங்களை வளர்த்து விடறதுல அவருக்கு ஒரு சந்தோஷம். நானும் அவர் கூட ‘கண்ணுபடப் போகுதய்யா’ படத்தில் வரும் ‘மூக்குத்தி முத்தழகு’ பாடலுக்கு நடனம் சொல்லிக் கொடுத்திருக்கேன். எனக்கு நிறைய சப்போர்ட்டா இருந்தாரு.

அதேபோல, அவர் பையன் படம் ரிலீஸ் ஆகும் போது இறங்கி நான் பப்ளிசிட்டி செய்யலாம்னு இருக்கேன். அந்த படக்குழுவினர் ஒத்துக்கிட்டாங்கன்னா, சண்முக பாண்டியன் படத்தில் நான் பைட்டோ, சீனோ, சாங்கோ, கெஸ்ட் ரோல்ல பண்ணலாம்னு இருக்கேன்.

யாராவது ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்க, சண்முக பாண்டியன் தம்பி கூட சேர்ந்து நான் நடிக்க தயாரா இருக்கேன். அவங்க குடும்பத்துக்கு நாம ஏதாவது பண்ணணும்னா இதுதான் பண்ணணும்னு தோணிச்சி, அதான் உங்க கூட ஷேர் பண்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘ஹனுமான்’ தெலுங்குப் படமல்ல, நேரடித் தமிழ் படம் மாதிரி தான் இருக்கும் – நடிகர் தேஜா சஜ்ஜா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here